
மண்சரிவு அபாயம் : கண்டி, நுவரெலியாவுக்கு சிவப்பு எச்சரிக்கை!
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று புதன்கிழமை இரண்டு மாவட்டங்களுக்கு அமுலாகும் வகையில் மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தும் சிவப்பு எச்சரிக்கை (மட்டம் 3) விடுக்கப்பட்டுள்ளது.
வெளியேற வேண்டிய பகுதிகள்: கண்டி மாவட்டம்: உடதும்பர பிரதேசம், நுவரெலியா மாவட்டம்: நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை பிரதேசங்கள்.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, பதுளை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அபாயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்டம்: கந்தகெட்டிய பிரதேசம், மாத்தளை மாவட்டம்: வில்கமுவ பிரதேசம், நுவரெலியா மாவட்டம்: மதுரட்ட மற்றும் ஹங்குரன்கெத்த பிரதேசங்கள்.
இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
