மண்சரிவில் சிக்குண்டு நால்வர் பலி – 50 பேர் மாயம்
வட இந்தியா உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மண்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு நால்வர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 50 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைக்களுக்காக இந்திய இராணுவம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.