
மண்சரிவில் சிக்கி வயோதிபர் மரணம்
பேராதனை நகரில் உள்ள பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு வர்த்தக நிலையங்களும் சேதமடைந்துள்ளன.
சேதமடைந்த வர்த்தக நிலையமொன்றில் தங்கியிருந்த 68 வயதான ஒருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
