மணிப்பூர் விவகாரம்: முக்கிய குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு
இந்தியாவின் மணிப்பூர் பகுதியில் இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுவீதியில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர செயலுக்கு அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஹேராதாஸ் (வயது – 32) என்பவரின் புகைப்படத்தை அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ளதுடன் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “பிரதமரே, இது நாட்டுக்கு அவமானம் என்பது அல்ல மணிப்பூர் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் வலியும் அதிர்ச்சியும்தான் இந்த வன்முறையை உடனே நிறுத்துங்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்