மணல் ஏற்றி பயணித்த டிப்பர் லொரிகள் மீட்பு: 6 சாரதிகள் கைது

கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லாற்று பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை அனுமதி பத்திரத்திற்கு முரணாக வீதியில் மணல் ஏற்றி பயணித்த ஆறு டிப்பர் லொரிகள் கைப்பற்றப்பட்டதுடன், அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்புபதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்