மணமேடையில் மணப்பெண்ணின் தங்கையை கரம்பிடித்த மாப்பிள்ளை

இந்தியாவில் பீகாரின் சரண் மாவட்டத்தில் அக்காவை திருமணம் செய்துக் கொள்ள வந்திருந்த மாப்பிள்ளை தங்கையை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

சாப்ரா நகரின் பின்டோலியில் வசிக்கும் ஜக்மோகன் மஹதோவின் மகன் ராஜேஷ் குமார் என்பவரே பபௌலி கிராமத்தில் வசிக்கும் ரிங்கு என்பவரை திருமணம் செய்வதற்கு நிச்சயித்து விட்டு அவரது தங்கையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமண நாளன்று மணப்பெண்ணின் தங்கை புதுல் குமாரி, ரகசியமாக கூரையின் மீது ஏறி மாப்பிள்ளை ராஜேஷை அழைத்து, நீ என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், இங்கிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொள்வேன் என மிரட்டியுள்ளார்.

அதன் பின்னர் மணமகன் ராஜேஷ் தனது குடும்பத்தினரையும் உறவினர்களையும் அழைத்து பேசியுள்ளார். பின்னர் இந்த விவகாரம் கைகலப்பாக மாறியதுஇ இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து இச்சம்பவம் மாஞ்சி பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு தெரிய வந்தது.

நிலைமை குறித்து தகவல் கிடைத்ததும்இ பொலிஸார் உள்ளூர் தலைவர் மற்றும் மணமகன் ராஜேஷிடம் பேசினர். ரிங்குவுடன் திருமணம் நிச்சயிக்கப்படுவதற்கு முன்பே தனக்கு புதுல் நெருக்கம் என இரு குடும்பத்தாரிடம் கூறினார் ராஜேஷ்.

சாப்ராவில் உள்ள கல்லூரியில் இடைநிலைத் தேர்வை முடித்த புதுல், அடிக்கடி ஊருக்குச் சென்று அங்கு ராஜேஷை சந்தித்து வந்திருக்கிறார். அந்த சந்திப்புகளின் போது இருவரும் ஒருவரையொருவர் காதலித்திருக்கின்றனர். காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பு ரிங்குவுடன் ராஜேஷுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் விரக்தியடைந்த புதுல், திருமணத்தை நிறுத்துவது அல்லது தற்கொலை செய்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

பின்னர், மணமகளும் தனது தங்கை புதுல் குமாரியுடன் மணமகன் ராஜேஷ்குமார் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். ஒருவழியாக பிரச்சினை முடிந்து மணப்பெண்ணின் தங்கையை மணமுடித்து ஊர் திரும்பினார் மணமகன் ராஜேஷ்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க