மட்டு.வாழைச்சேனை பகுதியில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவான் தென்னந்தோட்டம் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டவான் பகுதியைச் சேர்ந்த கனகரெட்டிணம் குணசுந்தரம் (வயது 46) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 22 ஆம் திகதி ஆற்றுக்கு மீன்பிடிக்க சென்று வீடு திரும்பாத நிலையில் அவரை தேடி சென்ற போது நேற்று சடலமாக காணப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய சம்பவ இடத்துக்குச் சென்ற மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்ட பின் சடலம் மேலதிக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்தவரின் மனைவி மத்திய கிழக்கு நாடொன்றில் பணி புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.
