மட்டு.வாழைச்சேனை கமநல அமைப்புகளின் பொங்கல் விழாவும், இரத்ததான நிகழ்வும்
மட்டக்களப்பு-வாழைச்சேனை, கமநல பிரிவுக்குட்பட்ட விவசாய அமைப்புக்களும், கமநல அபிவிருத்தி குழுவும் இணைந்து நடாத்திய, இரத்ததான நிகழ்வு, பொங்கல் விழா மற்றும் பரிசளிப்பு, கௌரவிப்பு நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை, கமநல நிலையத்தில் இடம்பெற்று .
மூன்று இன மக்களுக்கு சேவையினை மேற்கொள்ளும் கமநல நிலையத்தின், சர்வமத மதகுருமாரின் பங்கு பற்றலுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன
கடந்த புலமை பரீட்சை மற்றும் உயர்தர பரீச்சையில் சித்தியடைந்த, விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், கமநல சேவை நிலையத்தில் கடமையற்றும் உத்தியோகஸ்தர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.
இதன்போது, மாணவர்களின் நடனம் அதிதிகள் உரை என இடம்பெற்றதுடன், வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் விவசாய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது
அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஜெயக்காந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் கி.ஜெகன்நாத், மாவட்ட நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் எம்.ஐ. எம்.இப்ராகிம், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், கமநல சேவை நிலைய உத்தியோகஸ்தர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.







