
மட்டு.வாழைச்சேனையில் சுகாதார பிரிவினருக்கு எரிபொருள் வழங்கியதால் அமைதியின்மை
-வாழைச்சேனை நிருபர்-
மட்டக்களப்பு வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுகாதார பிரிவினருக்கு நேற்று சனிக்கிழமை எரிபொருள் விநியோகிக்கும் போது தமக்கும் வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தபோது அமைதியின்மை ஏற்பட்டது.
சுகாதார பிரிவினருக்கு வழங்கிய பின்னரே மீதமுள்ளதை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இறுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது வழங்கும் அளவு போதாது என்று தெரிவித்து வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்தில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து பொலிஸாரும், இராணுவத்தினரும் நிலமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சுகாதாரப் பிரிவினர் சிலர் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையும் ஏற்பட்டது.
அவர்களுக்கு பிறிதொரு தினத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் அறிவித்தல் விடுத்திருந்தார்.
