மட்டு.வாழைச்சேனையில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!
மட்டக்களப்பு வாழைச்சேனை ஆமர்குடா களப்பு பகுதியில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் 54 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மீன்பிடிக்கச் சென்ற தமது கணவர் காணாமல் போயுள்ளதாக உயிரிழந்த நபரின் மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதன்படி, முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் இறால் பண்ணையொன்றில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் அவர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்