மட்டு.வாழைச்சேனையில் கைக்குண்டு மீட்பு!

-கிரான் நிருபர்-

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒமடியாமடுவில், பால் பண்ணை வளாக பகுதியில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பகுதியில் இருந்து, கைகுண்டு ஒன்று துருப்பிடித்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நேற்று பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைக்குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்