
மட்டு.வாகரையில் வெடிபொருட்கள் மீட்பு
போரின் போது விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை வெடிபொருட்கள் மட்டக்களப்பு வாகரையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவின் பேரில், வாகரை முகாமைச் சேர்ந்த விசேட அதிரடிப்படையினர் அதிகாரிகள் குழு இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இவ்வாறு மீட்கப்பட்ட பொருட்களை நீதிமன்ற உத்தரவின்படி நாளை வியாழக்கிழமை வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவால் பாதுகாப்பாக அழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
