மட்டு.வவுனதீவில் இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை : ஒருவர் கைது!

மட்டக்களப்பு-வவுனதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரங்குடா ஆற்றுபகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையங்களை நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸார் முற்றுகையிட்டனர்.

இதன்போது ஒருவரை கைது செய்ததுடன் 10 பீப்பாய்க்கள் கொண்ட கோடாவை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.ஜ.சில்லாவின் தலைமையில் பொலிஸார் சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை பெரியகாளைகோட்டைமடு பகுதியிலுள்ள கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர் இதன் போது சந்தேகநபர் ஒருவரை ஒரு பரல் கோடாவுடன் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து நெல்லிக்காடு கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டபோது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடியதுடன் 9 பரல்கள் கோடாவை மீட்கப்பட்டு கசிப்பு அழிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்