மட்டு.வந்தாறுமூலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு சந்திவெளிப் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் செங்கலடிப் பகுதியில் இருந்து சந்திவெளி நோக்கி சென்ற வேளையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரம் ஒன்றில் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளதுடன்,  உழவு இயந்திரச் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்