
“மட்டு முயற்சியாண்மை-2024” விற்பனை கண்காட்சி
மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு நடாத்திய ‘மட்டு முயற்சியாண்மை-2024’ விற்பனை கண்காட்சி நேற்று திங்கட்கிழமை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இக்கண்காட்சி நிகழ்வினை சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான தே.வேணி மற்றும் ஆர்.யசோ ஆகியோர் ஒழுங்கமைத்திருந்தனர்.
இக்கண்காட்சி நிகழ்வில் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.




