மட்டு. போதன வைத்தியசாலையில் மருந்துவழங்குமிடத்தில் நோயாளர்கள் அவதி

மட்டக்களப்பு போதன வைத்தியசாலையில் இன்றைய தினம் புதன் கிழமை பல்கலைக்கழக அலகு கிளினிக் வருகைதந்த நோயாளர்கள் கடும் சிரமப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் வருகை தந்த நோயாளர்கள் வைத்தியரிடம் வைத்திய பரிசோதனை முடிந்தவுடன் மருந்து பெற்று கொள்வதற்காக மருந்து வழங்கும் இடத்திற்கு சென்ற போது அங்கு மூன்று மருந்து வழங்கும் இடம் (கவுண்டர்கள்) இருந்த போதிலும் இரண்டு மருந்து வழங்கும் இடம் (கவுண்டர்) பூட்டப்பட்டு இருந்தமையினால் ஒரு கவுண்டரில் மாத்திரம் மருந்து வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அதிகளவான நோயாளர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்