மட்டு.பொலிஸ் நிலையங்களுக்கு 7.5 மில்லியன் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பொலிஸ் நிலையங்களுக்கு பொலிசாரின் நலன்புரி தேவைகளுக்காக 7.5 மில்லியன் ரூபா பெறுமதியான மின் உபகரணங்கள், குளிர்சாதனப் பெட்டிகள் தொலைக்காட்சிகள் உட்பட பல பொருட்களை இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகனவினால் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இப்பொருட்களை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன, உதவி பொலிஸ் மா அதிபர், உதா என்.பி.லியனகே, பொலிஸ் அத்தியட்சகர் அமல்,ஏ.எதிர்மன்ன மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் கலந்துகொண்டனர்.