
மட்டு. பிரதான வீதிகளில் கட்டாக்காலி நாய்களின் வரவு அதிகரிப்பு
-மட்டக்களப்பு நிருபர்-
பழைய கல்முனை வீதியிலுள்ள கல்லடி, நொச்சிமுனை மற்றும் நாவற்குடா பிரதான வீதிகளில் கட்டாக்காலி நாய்களின் வரவு அதிகரித்துள்ளமையால் இவ்வீதியூடாகப் பயணிப்போர் பல்வேறு அசௌகரியங்களுக்குஉள்ளாவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் இவ்வீதியூடாகப் பயணிக்கும் ஆசிரியர்கள் தமது கடமையின் நிமிர்த்தம் செல்கையில் விபத்துக்குள்ளான சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை பயணம் செய்த பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் யுவதியொருவர் கட்டாக்காலி நாயொன்று அவரின் முன்னால் பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயமுற்று மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மாநகரசபை அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
