மட்டு.பாவக்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலத்தில் இடம்பெற்ற போட்டி நிகழ்வு!
-மட்டக்களப்பு நிருபர்-
நிகழ்நிலை ஊடாக கற்றல் செயல்பாட்டில் ஈடுபடுகின்ற மாணவர்களுக்கு ஏற்படுகின்ற சாதகம் மற்றும் பாதக நிலை தொடர்பாக மாணவர்களுக்குத் தெளிவுப்படுத்தும் போட்டி நிகழ்வு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள பாவக்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் இயங்கி வருகின்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான ஏ யு லங்கா நிறுவனத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகம், மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மன்முனை மேற்கு பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நடாத்திய மாணவருக்கிடையிலான விவாதப் போட்டியில் உன்னிச்சை எட்டாம் கட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பாவக்கொடி சேனை விநாயகர் வித்தியாலய மாணவர்கள் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் மதிராஜ், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் நிஷா ரியாஸ், ஏ யு லங்கா நிறுவன சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் நந்தகுமார் மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்