மட்டு. பாலமீன்மடு வேம்படி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தோரோட்டம்

-மட்டக்களப்பு நிருபர்-

கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற மட்டக்களப்பு – பாலமீன்மடு வேம்படி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் விநாயகப்பெருமானுக்கான விசேட அபிசேக பூஜை மற்றும் வசந்த மண்டபப் பூஜையும் இடம்பெற்றது.

மட்டக்களப்பு பாலமீன்மடு வேம்படி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் இன்றைய தினம் அலங்கரிக்கப்பட்ட சித்திரத்தேரில் ஏறிய எம்பெருமானுக்கான விசேட பூஜையைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோசத்துடன் தேரோட்டம் ஆரம்பனது.

இத் தேரோட்டத்தில் பல நூற்றுக்கணக்கான அடியார்கள் புடை சூழ, மிகச் சிறப்பாக தேரோட்டம் இடம்பெற்றமையும் சிறப்பம்சமாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்