மட்டு நாவற்குடாவில் வாகன விபத்து: மூவர் படுகாயம்

மட்டக்களப்பு காத்தான்குடி நாவற்குடாவில் இன்று ஞாயிற்று கிழமை மாலை விபத்து ஏற்பட்டு மூவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனையிலிருந்து மாங்காய்களை ஏற்றிக்கொண்டு மினுவான்கொடை நோக்கிச் சென்ற லொறி ஒன்று சாரதியின் அதிக தூக்கம் காரணமாக மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரிக்கு முன்னால் அமைந்துள்ள மின்கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறி திடீரென மின்கம்பத்தில் மோதியதன் காரணமாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் நடத்துனருக்கு பாரிய காயங்கள் ஏற்பட்டு பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்