மட்டு நவீன நூலகத்திற்கான திட்டசெயல்படுத்தல் குழு நியமனம்
மட்டக்களப்பில் அமையவுள்ள மாபெரும் நவீன நூலகத்திற்கான புத்தகங்கள், ஆவண பதிவேடுகள், ஏட்டுச் சுவடிகள், பண்பாட்டு மரபுரிமை சாதனங்கள் போன்றவற்றையும் ஏனைய முக்கிய தேவையான விடயங்களையும் தேடி சேகரித்து ஒழுங்குபடுத்துவதற்கான திட்ட செயல்படுத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது
அதன்படி குறித்த குழுவினூடாக உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் குறிப்பாக தமிழ்நாடு போன்ற இடங்களில் செயல்படும் தனியார் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள், அமைப்புகள், இயக்கங்கள் என்பது போன்ற விபரங்களை அறிந்து அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி குறித்த பணி முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே குறித்த நோக்கம் வலுப்பெற கிழக்கு மாகாணத்தினதும் மட்டக்களப்பு மாவட்டத்தினதும் வளர்ச்சி மீது அக்கறையும் கரிசனையும் கொண்டவர்கள் இவாறானதொரு புத்தகசாலையை எமது மண்ணில் அமைப்பதற்கு ஒத்துழைப்புடனும்இ பரஸ்பர நம்பிக்கையுடனும் செயற்பட்டு நீங்கள் படித்த சுவாரஷ்சியமான கருப்பொருள் நிறைந்த புத்தகங்களை இக்குழுவினூடாக வழங்கி குறித்த நூலகத்தை உயிரோட்டம் மிக்கதாக மாற்றும் உன்னத செயற்பாட்டில் பங்குதாரர்களாகும்படி தங்களை கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன் உங்களால் வழங்கப்படும் புத்தகங்கள் அனைத்தும் உங்கள் பெயர்பட்டியல்களுடன் இணைத்து நூலக திறப்புவிழாவின் போது காட்சிப்படுத்தப்படும் என்பதனையும் அறியத்தருகின்றோம் என குறித்த குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்