மட்டு. தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பாசறை மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பாகப் பொது மக்களுக்குத் தகவல்களை வழங்குதற்கான நிகழ்ச்சித் திட்டமாக அமைந்திருந்தது.

இதன்போது சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் தாதி அலுவலர்கள் சிறுவர்கள் பாதுகாப்புத் தொடர்பில் கொண்டுள்ள அறிவு , திறமைகள் மற்றும் மனப்பாங்கினை மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இப் பாசறை அமைந்திருந்தது.

நாடளாவிய ரீதியில் சிறார்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் முகமாகவும் துஸ்பிரயோகம் இடம் பெறாவண்ணமும் முற்தடுப்பை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மாவட்ட உளநல சமூக உத்தியோகத்தர் ஆர். பிரபாகர், மற்றும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம் . ஆர்.நிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்