மட்டு.சந்திவெளி திகிலியூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் இராஜகோபுர மகாகும்பாபிஷேக நிகழ்வு

-கிரான் நிருபர்-

மட்டக்களப்பு சந்திவெளி திகிலியூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் இராஜகோபுர மகாகும்பாபிஷேக நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதிகாலை வேளை கிரியை வழிபாடு ஆரம்பமாகி சிவாச்சாரிய குருமார்களின் வேத மந்திர பாராயணத்துடன் அடியார்களின் அரோகரா கோஷத்துடனும் மங்களவாத்தியம் முழங்க இராஜகோபுரத்திற்கான கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று விக்னேஸ்வர வழிபாடு விஷேட புண்ணியாகவாசனம், அனுங்ஞை வழிபாடு என்பன நடைபெற்றது. பின்னர் கணபதி ஓமம், மகாலெட்சுமி ஓமம் இநவக்கிரக ஓமம். வாசு சாந்தி கிரியை வழிபாடுகள் என்பன நடைபெற்றது.

யாக பூசை கலநஸ்த்த ஸ்த்தாபனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது, பின்னர் பரிவார மூர்த்தியாகிய சிவலிங்கத்தை ஸ்த்தாபித்தல் நிகழ்வு நடைபெற்றது, சிவலிங்கத்தை ஸ்தாபிப்பதன் மூலமாக சிவ வழிபாடுகளை மென்மேலும் உருவூற்றுதலாக ஆண், பெண் என சகலரும் வழிபடக் கூடியவகையில் ஆலயத்தின் வெளிப் புறத்தில் சிவலிங்கம் ஸ்தாபனம் செய்யப்பட்டமை சிறப்பாகும்.தொடர்ந்து இராஜகோபுரத்தில் கலசம் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மறு நாள் சனிக்கிழமை விசேட கிரிஜைகள் நடைபெற்று சிவலிங்கத்திற்கு அஸ்ட வந்தனம் (மருந்து சாத்துதல்) நிகழ்வு நடைபெற்றது.

இன்றைய நாள் இராஜகோபுர கும்பாபிஷேக நிகழ்வினை தொண்டமானாறு யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த பிரதம குரு சிவஸ்ரீ த.விசாகரெத்தினம் குருக்கள், பருத்திதுறை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வசாதகாசிரியர் சிவஸ்ரீ சபாபாஸ்க்கர குருக்கள் மற்றும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கமலநாதன் குருக்கள் என்போர் நடாத்தினார்கள்.

கும்பாபிஷேக நிகழ்வுகள் யாவும் ஆலய தர்மகத்தா சிவஸ்ரீ செ.மகேந்திரன் சிவச்சாரியரின் ஆலோசனையில் நடைபெற்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்