மட்டு.கோறளைப்பற்று தெற்கு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பட்டிப்பொங்கல் விழா

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு, கால்நடை அபிவிருத்தி பால் உற்பத்தியாளர்கள் கமநல அமைப்பு மற்றும் புலிபாய்ந்தகல் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து நடாத்திய, பட்டிப்பொங்கல் விழா, இன்று சனிக்கிழமை புலிபாய்ந்தகல் வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இவ் விழாவில் வரவேற்பு நடனத்தை தொடர்ந்து, சிறந்த பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும், அதிதிகள் உரைகளும் இடம்பெற்றன.

கோறளைப்பற்று தெற்கு கால்நடை பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் சுல்பிகான் அபூபக்கர், மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் தெ.ஜெகநாத், விவசாயம் கால்நடை காணி அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன், மாகவலி B பிராந்திய திட்ட பணிப்பாளர் பி.ஜீ நேயல் ஜெயசிறி, மகாவலி B திட்ட உதவி பணிப்பாளர் ரி.சசிவதனி, கமநல சேவை உத்தியோகஸ்தர்கள், கால்நடை அபிவிருத்தி திணைக்கள உத்தியோகஸ்தர்கள், கிராம உத்தியோகஸ்தர், பால் பண்ணையாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.