
மட்டு.கொக்கட்டிச்சோலையில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை பாடசாலை வீதியில் இருந்த குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று வியாழக்கிழமை முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன் போது 630000 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது. மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
