மட்டு.கூழாவடி ரயில் கடவையில் விபத்து

மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முயன்ற காரொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை நண்பகல் இடம்பெற்ற இவ்விபத்தில் ஏறாவூரைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையே படுகாயமடைந்துள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள ரயில் கடவையை காரொன்று கடக்க முற்பட்ட வேளை ரயிலில் மோதி கார் சேதமடைந்துள்ளதுடன் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கடவையில் பாதுகாப்பு கடமையில் நிரந்தரமாக ஒருவரும் இல்லை என்றும் ரயில் வரும் போது அங்கு கடவையில் தடை போடுவதில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சுதத்தியுள்ளனர்.

இந்த கடவையில் பல முறை பல விபத்துகள் நடைபெறவிருந்து நூலிழையில் தப்பித்ததாகவும் அப்பகுதி மக்கள் தங்கள் விசனத்தை வெளியிட்டுள்ளனர்.