மட்டு.கிரானில் ஈழத்தமிழர் முன்னணியின் அலுவலக திறப்பு விழா
ஈழத்தமிழர் முன்னணியின் அரசியல் பணிமனையின் தலைமைச் செயலகம் மற்றும் அன்பின் இல்லம் அறக்கட்டளையின் அலுவலகம் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை திருமலை வீதி கிரானில் அதன் ஸ்தாபகர் சரவணமுத்து ஜெயக்குமாரினால் திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு /கிழக்கின் மக்களின் வாழ்கை தரத்தினையும் இளைஞர்களின் அரசியல் கலாச்சாரத்தினை மேம்படுத்தவும் , எதிர்கால அரசியல் செயற்பாடுகள் மக்களுக்கான சமூக பணிகள் என்பன முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஈழத் தமிழர் முன்னணியின் தலைவர் தெரிவித்தார்.





