
மட்டு.கிண்ணையடி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயத்தில் நாட்காட்டி வெளியீடு
மட்டக்களப்பு-கிண்ணையடி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயத்தினால், 2026 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி, நேற்று வியாழக்கிழமை மாலை வெளியிட்டு வைக்கப்பட்டது .
ஆலய தலைவர் ஆ.அருளேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், நிர்வாக சபை உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், ஏனைய ஆலயங்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
