மட்டக்களப்பில் கதிர்காம யாத்திரைக்கு செல்ல சம்மதிக்கவில்லை என உயிரை மாய்த்த இளைஞன்

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு கல்லடி வேலூர் 8 ஆம் ஒழுங்கையில் இளைஞரொருவர் இன்று திங்கட்கிழமை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் .

மட்டக்களப்பு காத்தான்குடி வைத்தியசாலையொன்றில் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றும் வாமதேவன் டிலக்ஷன் (வயது 27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கதிர்காம யாத்திரைக்கு செல்ல குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை என்ற கோபத்தில் குறித்த இளைஞர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்