
மட்டு. காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 30 பேரும் பிணையில் விடுதலை
மட்டக்களப்பு – காத்தான்குடியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட 30 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீண்ட நேர விசாரணையின் பின்னர் சற்றுமுன் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் எஸ். தியாகேந்திரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்
இதனையடுத்து 30 பேரையும் ஒவ்வொரு சரீர பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
