
மட்டு காத்தான்குடியில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடியில் இரு இளைஞர்கள் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம். எஸ்.ஏ ரஹீம் தெரிவித்தார்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகரின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் காரிய வசத்தின் பணிப்புரையின் பேரில், 26 வயதுடைய இளைஞர் ஒருவரும், 34 வயதுடைய மற்றொரு இளைஞரும் இவ்வாறு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரில் காத்தான்ககுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், வவுனியா கணேசபுரம் பகுதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரும் அடங்குவார்.
ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் சென்றதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் ஓட்டி வந்த NP BCI-7201 இலக்கம் கொண்ட TVS METRO மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஒரு நபரிடமிருந்து 2,037 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் மற்றும் மற்றொரு நபரிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருட்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
