
மட்டு.காத்தான்குடியில் பெண் போதைப் பொருள் வியாபாரி கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் போதைப்பொருள் வியாபாராத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 400 மில்லிகிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
