
மட்டு.காஞ்சிரங்குடா நாகஒளி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அணிக்கு 9 பேர் கொண்ட உதைபந்தட்ட சுற்று போட்டி
மட்டக்களப்பு காஞ்சிரங்குடா நாகஒளி விளையாட்டு கழகத்தின் 15வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முகமாகவும் அணிக்கு 9 பேர் கொண்ட விலகல் முறையிலான உதைபந்தட்ட சுற்று போட்டியானது கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்றுவரும் நிலையில் அதன் இறுதிநாளான நேற்றையதினம் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சி.சந்திரகாந்தன்; பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
மூன்று நாட்கள் இடம்பெற்ற குறித்த உதைபந்தட்ட சுற்று போட்டி நிகழ்வில் 45அணிகள் பங்கு பற்றியதுடன் காஞ்சிரங்குடா நாகஒளி விளையாட்டு கழகத்தினரும், காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டு கழகத்தினரும் இறுதிப் போட்டியில் பங்கு பற்றி இருந்த போதிலும் காஞ்சிரங்குடா நாகஒளி விளையாட்டு கழகத்தினர் முதலிடத்தை தன்வசப்படுத்தியிருந்தனர்.
இதன் போது காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியால அதிபர் சுந்தரமோகன் ,கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அபேரெட்ண, காஞ்சிரங்குடா கிராமிய குழுத் தலைவர் விஷ்னுகாந்தன் , விளையாட்டு கழக உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




