
மட்டு. பழுகாமம் ஆற்றினுள் பாய்ந்த மோட்டார் சைக்கிள்: ஒருவர் பலி இருவர் கைது
பழுகாமம் பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள ஆத்துக்கட்டு பாலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், இச்சம்பவம் தொடர்பாக இவருடன் கூட பயணம் செய்த இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
மோட்டார் சைக்கில் ஒன்றில் பயணித்த 3 பேர் பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்ட நிலையில் அதனை செலுத்தியவர் மோட்டார் சைக்கிளுடன் பாலத்தில் இருந்து கீழே தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு , மோட்டார் சைக்கிளில் பயணித்த மேலும் இருவர் பொலிசாரால் மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் பழுகாமம் பட்டாரபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஈஸ்வரன் தியாகராஜா ( வயது-39)என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நண்பர்கள் இருவருடன் சூட்டி ரக மோட்டார் சைக்கிளில் சம்பவதினமான இன்று காலை பழுகாமத்தில் இருந்து பெரிய போரதீவு பிரதேசத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்த போது ஆத்துக்கட்டு பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது குறித்த நபர் தவறி மோட்டார் சைக்கிளுடன் பாலத்தில் இருந்து கீழே தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இதைனையடுத்து பொலிசார் பொதுமக்களின் உதவியுடன் நீரில் மூழ்கி உயிரிழந்தவரையும் மோட்டர் சைக்கிளையும் மீட்டதுடன் அவருடன் பயணித்த இரு நண்பர்களையும் கைது செய்தனர்.
இதில் மீட்க்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உடபடுத்த நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

