மட்டு.கல்லடி விவேகானந்தா கல்லூரிக்கு பழைய மாணவிகளால் கணனிகள் அன்பளிப்பு!

-மட்டக்களப்பு நிருபர்-

“PROJECT 2030” இன் முழு அனுசரணையுடன் அவுஸ்திரேலியாவில் உள்ள i-tran தன்னார்வ கொடை நிறுவனத்தினால் Samarithan Hand அமைப்பினூடாக மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரிக்கு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 05 கணனித் தொகுதிகள் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

கல்லூரி அதிபர்  திருமதி நவகீதா தர்மசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், Samarithan hand அமைப்பின் பணிப்பாளர் டி. ஹரிஷங்கர், 2030 PROJECT ஒருங்கிணைப்பாளரும், விவேகானந்தா பழைய மாணவர் சங்கச் செயலாளருமான வைத்தியர் திருமதி பிரமிளா சசிகுமாரன், பாடசாலையின் முன்னாள் அதிபரும், விவேகானந்தா பழைய மாணவர் சங்க ஆலோசகருமான திருமதி இந்திராணி புஷ்பராஜா, மற்றும் உப அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்