மட்டு.கரடியன்குளம் ஆத்மகநானந்தா வித்தியாலயத்தில் ஒளிவிழா

மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டி அமைந்துள்ள கரடியன்குளம் ஆத்மகநானந்தா வித்தியாலயத்தில் ஒளிவிழா நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா தலைமையையில் இடம்பெற்றது.

இது மாவட்டத்தில் அதி கஷ்ட பிரதேசப் பாடசாலைகளில் ஒன்றாகும், இந்நிகழ்வில் முன்பள்ளிச் சிறார்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் துரை இராயி அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் இடம்பெற்ற ஒளிவிழா நிகழ்வில் பிரதேச மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் காணிக்குப் பொறுப்பான மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவருபரஞ்சினி, ஏறாவூரப் பற்றுப் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், நிட்ஸ் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் இ.துஷ்யந்தன், பாடசாலை அதிபர் என்.சண்முகலிங்கம் உட்பட இன்னும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்