மட்டு. ஓந்தாச்சிமடத்தில் விபத்து

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள ஓந்தாச்சிமடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் மிகவும் பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்கைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சுக்குநூறாக நொருங்கியுள்ளதுடன், பேருந்தின் முன்பகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்