மட்டு.ஏறாவூரில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பொலிஸ் கான்ஸ்டபிள் படுகாயம்!

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று புதன்கிழமை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு வீதி ரோந்து கடமைக்காக கைத்துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது.

அவர் சம்பவதினமான  புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு கடமையை முடித்துக் கொண்டு அந்த கைத்துப்பாக்கியை ஆயுத களஞ்சியப் பொறுப்பாளரிடம் வழங்க முற்பட்ட போது தவறுதலாக கைத்துப்பாக்கி வெடித்தது.

இதன்போது, களஞ்சி பொறுப்பாளரான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் காலில் துப்பாக்கி வெடித்து சூடு ஏற்பட்டதையடுத்து, படுகாயமடைந்த நிலையில் அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்