மட்டு.ஆரையம்பதியில் பாம்பு கடித்து இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு ?

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திருநீற்றுக்கேணி கிராமத்தில், பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை 1.30 மணி அளவில், குறித்த நபர் தனது வீட்டுக்கருகாமையில் உள்ள குளக்கட்டு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த போது, பாம்பு தீண்டியதாக அயலவர்கள் தெரிவிக்கிற்றனர்.

குறித்த நபர் பாம்பு தீண்டியதால்தான் உயிரிழந்தாரா என்பதை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.

திருநீற்றுக்கேணியில் குறித்த நீண்ட காலமாக பாம்புகள் இருப்பதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர், அதேநேரம் முதலைகளின் தொல்லைகளும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யோகராசா தில்லைவாசகம் (வயது 38) என்னும் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது, காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்