மட்டு.ஆரையம்பதியில் தனியார் பேருந்தொன்று சேதம்

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் தனியார் பேருந்தொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த பகுதியில் பிரதான வீதிக்கருகில் உள்ள வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தொன்றே இன்று வியாழக்கிழமை அதிகாலை சுமார் 4.00 மணியளவில் தீ பற்றி எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்