மட்டு.ஆரையம்பதியில் கடையொன்றில் பாரிய தீவிபத்து

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதான வீதியில் உள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்துச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஆரையம்பதி பிரதான வீதியில் உள்ள புடவைக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக அதற்கு அண்மையில் இருந்த இரும்புக்கடை மற்றும் வாகனம் பழுதுபார்க்கும் கடைகளுக்கும் தீ பரவி அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை .

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.