மட்டு. அரச ஊழியர்களின் உடல் உள ஆரோக்கியத்தினை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மாவட்ட அரச உத்தியோகத்தர்களின் உடல் உள ஆரோக்கியத்தினை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம் ஒன்றினை மாவட்ட செயலகம் மேற்கொண்டுள்ளது.

 

அதன்படி, மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்படும் தொற்றா நோய் மற்றும் மனஅழுத்தங்களை தவிர்க்கும் தூர நோக்கில் எரோபிக் நடனத்துடனான உடற்பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜாவின் ஆலோசனை வழிகாட்டலின்கீழ், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்தின் நேரடிக் கண்காணிப்பில் இப்பயிற்சி நெறிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

 

இதனடிப்படையில் சிறுவர் மற்றும் மகளிர் உளவள உதவியாளர் திருமதி. என். ஜனார்த்தனியின் ஒருங்கிணைப்பில் மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலகத்திற்கான பயிற்சி வகுப்பு கடந்த 16 ஆந்திகதியும், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி கடந்த 22 ஆந்திகதியும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

எரோபிக் நடணத்துடனான உடற்பயிற்ச்சி மற்றும் விழிப்புணர்வு செயலமர்வுகள் யாவும் எரோபிக் பயிற்றுவிப்பாளரும், கராத்தே பயிற்றுவிப்பாளருமான திருமதி. ஆர். முருகேந்தினால் நடாத்தப்பட்டு வருகின்றன.

 

இதன் அடுத்த கட்ட பயிற்சி செயலமர்வுகள் காத்தான்குடி, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி மற்றும் ஏனைய பிரதேச செயலகங்களில்   ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்