மட்டக்களப்பை சேர்ந்த குடும்பஸ்தர் வெள்ளவத்தையில் மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு!

மட்டக்களப்பை சேர்ந்த குடும்பஸ்தர் வெள்ளவத்தையில் மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு

 

வெள்ளவத்தை இராமகிருஷ்ணா பிளேஸில் உள்ள 5 மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசையா தவராசா (59 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் 3 வருடங்களுக்கு முன்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ணா பிளேஸில் உள்ள ஒரு வர்த்தகரின் வீட்டிற்கு காவலாளியாக வேலைக்கு வந்துள்ளார்.

மேல் மாடியில் உள்ள நடைபாதைக்கு அருகில்  இன்று புதன்கிழமை காலை மர கைப்பிடியால் செய்யப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்தி யன்னல் அடைப்புகளை சுத்தம் செய்யும் போது அவர் கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News 24