மட்டக்களப்பு வாவியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாவியில் பெண் ஒருவர் சடலமாக மிதப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.