
மட்டக்களப்பு வாழைச்சேனையில் ஒருவர் கொலை (update)
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனையில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இரண்டுபேர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் சகோதரன் மற்றும் சகோதரி என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வடமுனை ஊத்துச்சேனை பிரதேசத்தில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் சம்பவத்தில் உயிரிழந்தவர் மற்றும் அவரது மனைவியின் சகோதரன் இணைந்து மது அருந்திய நிலையில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்கம் சண்டையாகமாறியதையடுத்து உயிரிழந்தவர் மீது கோடரி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுடத்து குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான வேலு சிவசுப்பிரமணியம் (வயது – 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு வாழைச்சேனையில் ஒருவர் கொலை
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
