மட்டக்களப்பு வாழைச்சேனை உல்லாச விடுதிகளில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு

வாழைச்சேனை சுகாதார பிரிவுக்குட்பட்ட உல்லாச விடுதிகளில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பாமினி அச்சுதன் தலைமையில் பாசிக்குடா அனந்தையா ஹேட்டலில் சின்னமுத்து தடுப்பூசி ஏற்ற தவறியவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.

காற்றினால் பரவக்கூடிய நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் தீவிரமான ஈடுபட்டு வருகின்றமை சுட்டிக்காட்ட தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்