
மட்டக்களப்பு வாழைச்சேனையில் வேன் விபத்து
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – தியாவட்டவான் பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனை பகுதியை நோக்கி பயணித்த வேன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பாக இதுவரை எந்த தகவலும் பதிவாகவில்லை.
இதேவேளை விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.