மட்டக்களப்பு  – வாழைச்சேனையில் 25 மதுபான போத்தல்கள் திருட்டு

மட்டக்களப்பு  – வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தின் நீதிமன்ற அறைக்குள் புகுந்து 25 மதுபான போத்தல்கள் கொண்ட பெட்டியை திருடிய நபர் ஒருவர் இன்று புதன் கிழமை கைது செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவான் நீதிமன்றத்தின் பாதுகாவலர் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதவான் நீதிமன்ற சுவரில் ஏறி குதித்து வழக்கு அறையில் இருந்த போத்தல்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்