ஏறாவூர் வம்மியடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா
மட்டக்களப்பு – ஏறாவூர் வம்மியடி பேரருள் மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தான புனராவர்த்தன அஷ்டபந்தன ஏககுண்ட பட்ஷ மஹா கும்பாபிஷேகப் பெருவிழா விஞ்ஞாபனம் ஜனவரி மாதம் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
கும்பாபிஷேக தொடக்க நிகழ்வான கர்மாரம்பம் ஜனவரி 30ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி பெப்ரவரி மாதம் 1, 2 ஆம் திகதி எண்ணெய்க்காப்பு இடம்பெற்று 3ஆம் திகதி மகாகும்பாபிஷேகமும் மார்ச் மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சங்காபிஷேகமும் இடம்பெறவுள்ளது.
கிரியா கால நிகழ்வுகள் அனைத்திலும் மெய்யடியார்களை கலந்து கொண்டு விநாயகரின் அருளை பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்